Thiruvasagam is a collection of Tamil hymns written by the ninth-century poet Manikkavasagar. To access Thiruvasagam Tamil PDF, click the link below. It comprises 51 compositions and is the eighth volume of the Tirumurai, the sacred anthology of Tamil Shaiva Siddhanta.
Legend has it that Manikkavasakar, appointed as a minister by King Arimarttanar, was sent to buy horses but used the money to build a temple in Tirupperunturai.
According to the legend, Thiruvasagam is the only work signed and written by Lord Shiva in the guise of a Tamil man when narrated by Manikkavasagar. Though the poet tried to find the writer without success, the palm leaf manuscript was found inside the locked sanctum sanctorum of Thillai Nataraja with the Lord’s signature.
Thiruvasagam tamil pdf download

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.
- மாணிக்கவாசகரின் இந்நூலினைப் பல சமயத்தவரும் புகழ்ந்துள்ளனர்.
- மாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறுவர்.
- தமிழில் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் பழமொழி உள்ளது.
- மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள் என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது.
- “பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே’ – திருமுருக கிருபானந்த வாரியார்
திருவாசகம் என்பது ஒன்பதாம் நூற்றாண்டின் கவிஞர் மாணிக்கவாசகர் எழுதிய தமிழ்ப் பாடல்களின் தொகுப்பாகும். திருவாசகம் தமிழ் PDF ஐ அணுக, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும். இது 51 பாடல்களைக் கொண்டுள்ளது மற்றும் இது தமிழ் சைவ சித்தாந்தத்தின் புனிதத் தொகுப்பான திருமுறையின் எட்டாவது தொகுதியாகும்.
மன்னன் அரிமர்த்தனாரால் அமைச்சராக நியமிக்கப்பட்ட மாணிக்கவாசகர் குதிரை வாங்க அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அந்தப் பணத்தை திருப்பெருந்துறையில் கோயில் கட்ட பயன்படுத்தியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
புராணத்தின் படி, மாணிக்கவாசகர் உரைக்கும் போது, சிவபெருமான் தமிழர் வேடத்தில் கையெழுத்திட்டு எழுதிய ஒரே படைப்பு திருவாசகம் மட்டுமே. கவிஞர் எழுத்தாளரைக் கண்டுபிடிக்க முயன்றாலும் வெற்றியடையாமல் தில்லை நடராஜர் சன்னதிக்குள் பூட்டியிருந்த பனை ஓலைப் பிரதி இறைவனின் கையொப்பத்துடன் காணப்பட்டது.