Jagadguru Shri Chandrasekharendra Saraswati Mahaswamigal, also known as the Sage of Kanchi or Mahaperiyavar, served as the 68th Jagadguru Shankaracharya of the Kanchi Kamakoti Peetham. To access Deivathin Kural Tamil PDF, click the link below. Mahaperiyavar’s teachings are compiled in a Tamil book titled “Deivathin Kural” (Voice of God).
Born on May 20, 1894, as Swaminathan Sharma in Villupuram, Tamil Nadu, he was raised in a Kannada-speaking Smarta Brahmin family. His father, Subrahmanya Sastri, worked as a teacher, and his mother, Mahalakshmi, hailed from a Kannada Brahmin family near Tiruvaiyaru. Swaminathan was the second child, and his younger brother was the yogi Sivan Sir. For more information, click here.

Deivathin kural tamil pdf download
சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) (மே 20, 1894 –சனவரி 8, 1994) அல்லது காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாவார். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். தெய்வத்தின் குரல் எனும் பெயரில் இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார்.
மஹாபெரியவா 1894 மே 20 அன்று தென் ஆற்காடு மாவட்டத்தில்விழுப்புரத்தில் பிறந்தார். இவரது தந்தை சுப்ரமண்ய சாஸ்திரி தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தார், இவர் கன்னட மொழி பேசும் ஸ்மார்த்த பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். இவரது தாயார் மகாலட்சுமியும் திருவையாறுக்கு அருகிலுள்ள இச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த கன்னட பிராமணர் ஆவார். இவர்களின் இரண்டாவது குழந்தையே மஹாபெரியவா என அழைக்கப்பட்ட சந்திரசேகர சரசுவதி சுவாமியாவார். இவருக்கு பெற்றோர் வைத்தப்பெயர் ஸ்வாமிநாதன்.தனது துவக்கக் கல்வியை திண்டிவனத்தில் உள்ள ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
இவருக்கு உபநயணம் 1905 ஆம் ஆண்டில் திண்டிவனத்தில் நிகழ்த்தப்பட்டது, மேலும் அவர் வேதங்களை நன்கு அறிந்தவர் மற்றும் அவரது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பூஜைகள் செய்யத் தொடங்கினார். 1906 ஆம் ஆண்டில், காமகோடி பீடத்தின் அறுபத்தி ஆறாவது ஆச்சார்யா, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி, சதுர்மஸ்ய விரதத்தைக் கடைப்பிடித்து திண்டிவனத்திற்கு அருகிலுள்ள பெருமுக்கல் என்ற சிறிய கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது ஆச்சார்யாவின் ஆசீர்வாதங்களை மஹாபெரியவா பெற்றுக் கொண்டார். ஆச்சார்யர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மறைவிற்குப் பின்னர் சந்திரசேகர சரசுவதி சுவாமியின் தாய் வழி உறவினர் அறுபத்தியேழாவது ஆச்சார்யராக நியமிக்கப்பட்டார். அவர் உடல் நலம் குன்றியதால் சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் 1907 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது ஆச்சார்யராக சன்னியாசர் சரஸ்வதி என்ற சன்னியாச பெயருடன் நியமிக்கப்பட்டார். பின்னர் வேதங்கள், புராணங்கள், பல்வேறு இந்து நூல்கள் மற்றும் பண்டைய இந்திய இலக்கியங்களுடன் நன்கு பயிற்சி பெற்றார். 1909 ஆம் ஆண்டு இரண்டாண்டுகள் மடத்தினில் தங்கி வேதாந்தங்களைக் கற்றுக் கொண்டார். பின்னர் 1911 முதல் 1914 வரை அகண்ட காவிரியின் வடகரைக் கிராமமான மகேந்திரமங்கலத்தில் கற்றார். இவர் கணிதம், வானியல் மற்றும் புகைப்படத்துறையில் அதிக ஆர்வம் காட்டினார். 1914 ஆம் ஆண்டில் கும்பகோணம் திரும்பினார்.
சிறந்த ஞானியாக ஆதிசங்கரரைப் போலவே இவரும் நாட்டின் பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றினார். பல இடங்களில் தர்மம், பண்பாடு, கலாச்சாரம் பற்றி மக்களிடம் சொற்பொழிவாற்றினார். திண்ணைகள், ஆற்றுப்படுக்கைகள், சிறிய கூடங்கள் என எல்லா இடங்களிலும் சொற்பொழிவாற்றினார். அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு தெய்வத்தின் குரல் எனும் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்நூல் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் பலபகுதிகளில் சனாதான தர்மத்தின் நடைமுறைகளைக் கொண்டு வந்தார். இதன் பயனாக பல்வேறு வேத பாட சாலைகள் உருவாக்கப்பட்டன.