People all over the world share Abdul Kalam’s quotes in Tamil on social media, and his speeches and books still inspire many. His wise and simple words can motivate anyone to reach their dreams and make a positive impact on the world.
click here to get whatsapp status for abdul kalam quotes in tamil
உலகெங்கிலும் உள்ள மக்கள் அப்துல் கலாமின் மேற்கோள்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள், அவருடைய உரைகளும் புத்தகங்களும் இன்னும் பலரை ஊக்குவிக்கின்றன. அவரது புத்திசாலித்தனமான மற்றும் எளிமையான வார்த்தைகள் யாரையும் அவர்களின் கனவுகளை அடைய மற்றும் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த ஊக்குவிக்கும்.

Abdul Kalam quotes in tamil
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது . அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது . அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
கற்ற அறிவையும் , பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்
நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான் . சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி . இங்கே பாடம் சொல்லிக்கொடுத்தத் தேர்வு வைப்பது இல்லை . தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது
சிக்கனம் பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல . அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம் , என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல விடாமுயற்சியினால் தான் .
முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு . ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும் , துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது .
Best Abdul Kalam quotes in tamil
எல்லோரையும் நம்புவது அபாயகரமானது . ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன . ஒன்று காலம் இன்னொன்று மௌனம்
எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள் .
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை . முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை
செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது
சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட , என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் . வேண்டும் .
நேற்றைய பொழுதும் நிஜமில்லை ; நாளைய பொழுதும் நிச்சயமில்லை ; இன்றைக்கு மட்டுமே நம் கையில்
மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி , அழகான பசி . ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து . அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் .
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது .
அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின் கடமையை பாழாகி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
உன் கைரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்துவிடாதே! அடுத்தமுறை தோல்வியுற்றால், உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்தான் கிடைத்தது என்பார்கள்!
கனவு காணுங்கள்…கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.
உன்னால் மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்.
நீ கடைசியாய் செய்த தவறு தான் இப்போது உன்னுடைய முதன்மையான ஆசான்.
உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம்.
நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்
ஒருநாள் நிச்சயம் விடியும். அது உன்னால் மட்டும் முடியும்.
நீ செல்லும் பாதைகளில் தடைகள் ஏதும் இல்லை என்றால் அது நீ செல்லும் பாதை அல்ல, யாரோ ஒருவர் சென்ற பாதை.
நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.
ஒருமுறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் இலட்சியம்!
மாணவர்களின் மிக முக்கியமான இலக்கணம், கேள்வி கேட்பதே
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.
அற்ப சந்தோஷங்களுக்காக ஓடுவதைவிட உயர்ந்த இலட்சியங்களுக்காகப் பாடுபடுவது சாலச் சிறந்தது!
என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
புதிய விஷயங்களை படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு அவர்களது வேட்கையே ஊக்கமாக அமையும். மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை
மிக உயர்ந்த லட்சியம், மனிதர்களுக்கான எல்லை என்ற சுவர்களைத் தகர்க்கிறது.
success Abdul Kalam quotes in tamil
வெற்றி பெற்றவர்களின் கதைகள் உங்களுக்கு வெறும் தகவல்களை மட்டுமே அளிக்கும். தோல்வி அடைந்தவர்களின் கதை தன் வெற்றி பெறுவதற்கான வழிகளை சொல்லும்.
வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்!
நமது பிறப்பு ஓர் சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. ஒரு இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும்!
தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு நதி போல… ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக…
முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
தன்னம்பிக்கையும் தளராத உழைப்பும்தான் தோல்வி எனும் நோயைக் கொல்வதற்கான மருந்துகள்.
Abdul Kalam quotes in tamil conclusion
Dr. A.P.J. Abdul Kalam made a big impact on India and the world as a leader with a vision. His inspiring quotes in Tamil still motivate people from all walks of life. His legacy as a scientist, teacher, and leader is remembered. Dr. Kalam believed in education, science, and technology and showed humility, wisdom, and vision. His words inspire people to do their best and make a good impact on society. The things he said will keep guiding and encouraging future generations to make the world a better place.
click here to get whatsapp status for abdul kalam quotes in tamil
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இந்தியாவிலும் உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். தமிழில் அவரது ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் இன்றும் அனைத்து தரப்பு மக்களையும் ஊக்குவிக்கின்றன. விஞ்ஞானி, ஆசிரியர், தலைவர் என அவரது மரபு நினைவுகூரப்படுகிறது. டாக்டர் கலாம் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார் மற்றும் பணிவு, ஞானம் மற்றும் தொலைநோக்கு ஆகியவற்றைக் காட்டினார். அவரது வார்த்தைகள் மக்கள் தங்களால் இயன்றதைச் செய்யவும், சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தவும் தூண்டுகிறது. அவர் சொன்ன விஷயங்கள் எதிர்கால சந்ததியினரை உலகை சிறந்த இடமாக மாற்ற வழிகாட்டும் மற்றும் ஊக்குவிக்கும்.
Also view